கூழுக்குப் பாடிய ஒளவை

கூழுக்குப் பாடிய ஒளவை

சோழ நாட்டில் ஒரு நாள், ஒளவைபிராட்டியார் வெயில் மிகுந்த நன்பகலில் சோர்வோடு நடந்து சென்றுகொன்டிருந்தார். நீண்ட தூரம் நடந்த களைப்பில் அங்கிருந்த சிலம்பி எனும் பெயர்கொன்ட ஒரு தாசியின் வீட்டுத்திண்னையில் அமர்ந்து இளைப்பாரலானார். அவரைக்கண்ட தாசியும் அவரை மிகவும் அன்போடும் மரியாதையோடும் அவர் உண்ண கூழ் கொடுத்து நல்லபடி உபசரித்தார்.

அக்காலத்தில் புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் சிறப்பான விடயம், அதிலும் புகழ் பெற்ற புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் கெளரவத்திற்குரிய விடயம். சிலம்பிக்கும் தன்னைப்பற்றி புலவர்களால் புகழ்ந்து பாடக் கேட்க பேராவல். சோழ நாட்டின் பெரும் புலவர் கம்பரிடத்தில் அவள் பாட்டுக்கேட்க 1000 பொன்னுக்கு ஒரு வெண்பா பாடுவார் என்பதையறிந்து, தன்னிடமிருந்த மொத்த 500 பொன்னையும் அவருக்குக் கொடுக்க அவர் அரை வெண்பா மட்டுமே பாடியிருக்கிறார் அதாவது "தண்ணீரும்காவிரியேதார்வேந்தன்சோழனே
மண்ணாவதும்சோழமண்டலமே" எனபதோடு நிறுத்திவிட்டார். தன் சொத்து முழுதும் இழந்த சிலம்பி அதன்பின் ஏழ்மையில் சிக்குண்டாள்.

கம்பர் பாடிய அரை வெண்பா சிலம்பி வீட்டுச் சுவரில் தீட்டியிருக்க, மேலும் அதில் ஒரு வெண்பாவின் முதல் எழு சீர்கள் மட்டுமே எழுதியிருக்க கண்டு, அத்தாசியிடம் ஒளவை அதுபற்றி விசாரிக்கலானர், சிலம்பியும் நடந்ததைக் ஒளவையிடம் கூறி அழ அவள்பால் மனமிரங்கிய ஒளவையானவர் "பெண்ணாவாள் அம்பொற்சிலம்பிஅரவிந்தத்தாளணியும்
செம்பொற்சிலம்பேசிலம்பு" எனும் வரிகளைச் சேர்த்து வெண்பாவை பூர்த்தி செய்தார்.

தண்ணீரும்காவிரியேதார்வேந்தன்சோழனே
மண்ணாவதும்சோழமண்டலமே – பெண்ணாவாள்
அம்பொற்சிலம்பிஅரவிந்தத்தாளணியும்
செம்பொற்சிலம்பேசிலம்பு 14

அதாவது தண்ணீரில் சிறப்புக்குரியது காவிரிநீர்.அரசர்களில் சிறந்தவன் சோழன்.மண்ணிலே சிறந்ததுசோழமண்டலம்.இவற்றைப்போலவே சிலம்பில் சிறந்தது சிலம்பி என்னும் இந்த நல்லாள் காலில் உள்ள சிலம்பு எனப்பொருள்பட பாடி முடித்தார்.

ஒளவையின் திருவாக்கால் அதன்பின்னர் சிலம்பி ஏழ்மை நீங்கி மிகவும் வசதி படைத்தவளானாள். தனது கால்களின் சிலம்பை பொன்னால் அணியும் வண்ணம் அவள் பணக்காரியானாள்.

இதையெல்லாம் கேள்விப்பட்ட கம்பர் மிகவும் கோபமுற்று "கூழுக்குப் பாடி குடி கெடுத்தாள் பாவி" என்று இகழ்ந்தார் என்க் கூறப்படுகிற‌து.

கருத்துகள் இல்லை:

.


.

fallen leaves  ... Pictures, Images and Photos